கன்னியாகுமரி மாவட்டம் ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி குடும்பங்களை பாதுகாப்போம் என்ற வாசகத்தோடு தும்பக்கோடு பகுதியில் உள்ள நரிக்குழி என்ற கிராமத்தில், வில்லிசை பாடல்கள் மூலமாகவும், நாடகங்கள், நடனம் மூலமாகவும் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்சியின் முடிவில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உட்கொள்ள வேண்டிய சிறுதானிய உணவுகளும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதையும் படிங்க: சாமி கும்பிட வந்த பெண்ணை அறைந்த தீட்சிதர்!