கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே இரட்டை வழி ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நாகர்கோவில் பறக்கின்கால் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி அப்பகுதியில் உள்ள வீடுகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலர்கள் இடித்தனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அதற்கு அலுவலர்கள் அஞ்சுகிராமம் பகுதியில் வீடுகள் வழங்கப்பட உள்ளன என கூறினர். பின்னர் மீண்டும் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.
அங்கிருந்து பலர் காலி செய்து சென்றுவிட்ட நிலையில், சுமார் 30 வீடுகளில் வசிப்பவர்கள் தொடர்ந்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு அலுவலர்கள் வீடுகளை இடிக்க ஆரம்பித்ததால், அவர்கள் கதறி அழுதனர். இதனால் 21 நாட்கள் அவகாசம் அலுவலர்கள் கொடுத்துள்ளனர். மேலும் வீடுகளை காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வீடுகள் இடிப்பு : சாலை மறியலில் ஈடுபட்ட கோவை மக்கள்!