தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை கைவிடக்கோரியும் இந்தியா முழுவதும் கண்டன போராட்டம் நடந்துவருகிறது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் பலவேறு கட்சிகள் சமூக நல அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், குமரி மாவட்டம் திட்டுவிளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், 'டெல்லியில் நடைபெற்ற வன்முறையைத் தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
வன்முறையைத் தடுக்காமல் இருந்த டெல்லி காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: கனையா குமார் மீதான தேசத்துரோக வழக்கு: நடவடிக்கை எடுக்க டெல்லி அரசு அனுமதி