ETV Bharat / state

குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்தவரால் காலதாமதமான கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்

வீட்டில் படுப்பதற்கு பதில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்த வடமாநில தொழிலாளியால், பிணம் கிடப்பதாக எண்ணி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

author img

By

Published : Oct 5, 2020, 10:33 PM IST

train_waiting
train_waiting

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (அக்.5) மாலை ஆரல்வாய்மொழி அருகே செங்கல்சூளை ஒன்றில் பணிபுரிந்து வந்த கொல்கத்தாவை சேர்ந்த சீதாராம் (28) என்ற இளைஞர் குடிபோதையில் வீட்டில் படுப்பதற்கு பதிலாக தேவசகாயம் மவுண்ட் பகுதியில் உள்ள நாகர்கோவில் - சென்னை ரயில்வே இருப்பு பாதையில் தலை வைத்து தூங்கிவிட்டார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், தண்டவாளத்தில் பிணம் கிடப்பதாக கருதி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் சென்று போலீசார் விசாரணை நடத்திய போது, சீதாராம் குடிபோதையில் தூங்கி கொண்டு இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை பிடித்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னை காரணமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இதையும் படிங்க : நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு: தென்காசி நீதிமன்றத்தில் குற்றவாளி சரண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.