ETV Bharat / state

தபால் வாக்குப்பதிவில் ஏற்பட்ட காலதாமதம்: வாக்களிப்பாளர்கள் அவதி - postal voting issues

கன்னியாகுமரி: நாகர்கோவில் தொகுதியில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வராமல், காலம் தாழ்த்தியதால் வாக்களிக்க வந்தவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

நாகர்கோவில் தொகுதியில் தபால் வாக்குப்பதிவு

author img

By

Published : Mar 31, 2021, 9:07 PM IST

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் மற்றும் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று(மார்ச் 31) மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் நபர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் காவல் துறையினர், ஊர்க் காவல் படையினர், துணை ராணுவப் படையினர், முன்னாள் படை வீரர்களும் உள்ளனர்.

நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட, நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்தவகையில் காலை வாக்களிக்க வந்தவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் யாரும் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், அதிகாரிகள் வந்ததும் காவல் துறையினருக்கு மட்டும் தான் வாக்களிக்க வாய்ப்பளித்ததாகவும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வாய்ப்புத் தரவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க: நாங்கள் என்ன பாஜகவா? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்- ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.