தமிழ்நாட்டில் நாளை முதல்(மே.24) தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதை முன்னிட்டு, அத்தியாவசியக் கடைகள் இயங்கும் என்றும், பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையங்களில் இருந்து நேற்றிரவு(மே.22) முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று(மே.23) காலை முதலே ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். அரசு விரைவு பேருந்துகள்(எஸ்இடிசி) சென்னை, மதுரை, கோவை போன்ற பகுதிகளுக்கும், உள்ளூர் செல்லும் அரசு பேருந்துகளும், கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பயணிகள் பேருந்தில் ஏறவும், பயணிக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இலவச அவசர ஊர்தி சேவை!