குமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள் ஊராட்சி அலுவலகங்களில் வைத்தும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அந்த வகையில் திருவட்டாறு ஒன்றியத்திற்குட்பட்ட பேச்சிப்பாறை வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்கும் நிகழ்வு நேற்று திருவட்டார் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்பு தொடக்க நிகழ்வாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று பாடினர். அதில் ஒருவர் மைக்கில் தமிழ்த் தாய் வாழ்த்தைக் கொலை செய்யும் விதமாக தப்பும் தவறுமாக பாடிய காணொலி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் அதிகம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டமாகக் கருதப்படும் குமரி மாவட்டத்தில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்து மற்ற மாவட்டத்தினர் சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடனுக்குடன்: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகள்