கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரிகள் சார்பில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரும்பாட்டூர் ஊராட்சிப் பகுதியில் சோட்ட பணிக்கன் தெரிவிளை ஊர் பொதுமக்கள், அரசு அலுவலர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாமை சமுதாய நலக் கூடத்தில் நடத்தினர்.
ஊராட்சி மன்றத் தலைவர், தங்கமலர் சிவபெருமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஷெர்லின் சேல்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு முகாமில் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கிராமப்புற பெண்கள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விளக்கமும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளும் எடுத்துரைக்கப்பட்டது. நோய்களுக்கு நோய் குறித்து விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவர் ஷெர்லின் சேல்ஸ் பேசும்போது கூறுகையில்,"கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எப்போதும் நம்மை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மக்கள் அதிகமாகக் கூடும் இடத்திற்குச் செல்லாமல் இருப்பது நல்லது. கைகளை ஒரு நாளைக்கு பத்து முறைகள் கழுவுவது நல்லது. கொதித்த நீரில் எலுமிச்சை பழச்சாறையும் வேப்பிலையையும் போட்டுக் கை கழுவ வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: செங்கம் அருகே சிறப்பு மனுநீதி நாள் திட்ட முகாம்