கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று நாகர்கோவிலில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர், காய்கறி சந்தையில் உள்ள 35க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்பட 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலக பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் சுகாதாரத் துறையினர் மீன்வளத்துறை அலுவலகத்திற்கு சீல் வைத்து சுத்தம் செய்தனர். இதையடுத்து அலுவலகத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கரோனா அச்சத்தால் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கரோனா தொற்று