குமரி: கடந்த இரண்டு நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை வரை 1,280 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 167 பேரும், பயோனியர் குமாரசாமி கல்லூரியில் 133பேரும், கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் 143பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37ஆயிரத்தை கடந்துள்ளது. இதில், 27ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 10ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.
கடந்த 15ஆம் தேதி ஒரே நாளில் 28 பேர் பலியாகி இருந்தனர். 16ஆம் தேதி 14பேரும் 17ஆம் தேதி 21பேரும் பலியாகி இருந்த நிலையில், நேற்று 20 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் குமரி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 671ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 382 கடைகளுக்கு சீல்!