ETV Bharat / state

ராகுல் காந்தி பாதயாத்திரை குறித்து கன்னியாகுமரியில் ஆலோசனை - ராகுல் காந்தி பாதயாத்திரை குறித்து ஆலோசனை

ராகுல் காந்தி பாதயாத்திரை குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கன்னியாகுமரியில் ஆலோசனை நடத்தினர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை
காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை
author img

By

Published : Aug 25, 2022, 4:17 PM IST

கன்னியாகுமரி: ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் 148 நாட்கள், 3,700 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து விஜய்வசந்த் எம்பி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தினர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

நடந்து செல்லும் வழிதடங்கள் ஆய்வு பணிகள் செய்து வருவதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற பெயரில் தினமும் 25 கிலோமீட்டர் பாதயாத்திரை செல்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுக்கூட்டம் நடத்த உள்ள இடங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். இந்த ஆய்வின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.டி.சீலன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.