கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் இயங்கிவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான காலி இடத்தில் வணிக வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து கடைகளுடன் வணிக வளாகம் கட்டும் பணிகள் இன்று தொடங்கியது.
முன்னதாக, பூமி பூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இந்தக் கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படுகிறது.