தமிழ்நாட்டில் ஊரடங்கால் தங்களின் தொழில் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்து உண்ண உணவின்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விவசாயிகள் தங்கள் விளைவித்த விளை பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், விவசாயிகள் பயன்படுத்திவரும் இலவச மின்சாரத்தை தடைசெய்ய மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் மேலும் கவலையடைந்துள்ளனர். இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இதன்படி, முதல்கட்டமாக தமிழ்நாடு விவசாயிகள் பயன்படுத்திவரும் இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதனையடுத்து நிறுத்த துணிவற்ற தமிழ்நாடு அரசையும் கண்டித்து குமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி தலைமை வகித்தார்.
இதையும் படிங்க: குமரி மக்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ள கோவிட்-19 உதவி மையம்!