கன்னியாகுமரி: மாவட்டத்தில் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
அதற்கான மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் அக்கட்சியின் மாநில தலைவர் அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியதுமே, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி பேசினார். அப்போது அவரை பேசவிடாமல் கட்சியினர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூச்சலிட்ட கட்சியினரை விஜயதரணி புல்லுருவிகள் என்று பேசியதால், கட்சி தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். ஆனால் இந்த சம்பவத்தை மேடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மாநிலத் தலைவர் அழகிரி கட்சியினரை சமாதனப்படுத்தாமல் நாளிதழ்களை பார்த்துக்கொண்டு, கண்டும் காணாமல் இருந்தது தொண்டர்களை மேலும் எரிச்சலடைய வைத்தது.