கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியை ஆதரித்து, முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஞாறாம்விளை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் நடந்து வரும் வருமானவரி சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜக அரசாங்கத்திற்கும் எதிராகக் குரல்கொடுக்கும் பெரிய தலைவர்கள் இரண்டு பேரில் ஒன்று ராகுல், மற்றொன்று ஸ்டாலின். இவர்கள் மத்திய அரசிற்கு எதிராகப் போராடுவதால், ஒடுக்குவதற்கு இது போன்ற சோதனைகள் நடக்கின்றன.
இத்தகைய மிரட்டல்களுக்கு பயப்படமாட்டோம். திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும். அடுத்த முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்பார். காங்கிரஸ் தலைமை இரண்டுமுறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணியை வேட்பாளராக அறிவித்துள்ளது. அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வருமானவரித்துறை சோதனை ஏன்? துரைமுருகன்