கன்னியாகுமரி: நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், ”கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று துறைமுகம் அமைக்க கடந்த, மாதம் தூத்துக்குடி துறைமுகக் கழகத்திலிருந்து ’ஒப்பந்த பணிக்கான டெண்டர்’ விடப்பட்டது. இதனையடுத்து கடலோர கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று (மார்ச்.20) கடற்கரை கிராமப் பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்யும்போது, ”கன்னியாகுமரியில் அமைய உள்ள சரக்குப் பெட்டக மாற்று துறைமுகம், தூத்துக்குடி துறைமுகத்திற்கு மூன்று ஆயிரம் கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்ய மாற்றப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடியிடம் இருந்து எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளிவரவில்லை. இதற்கிடையே தூத்துக்குடிக்கு சரக்குப் பெட்டக மாற்று துறைமுகம் இடம் மாற்றப்பட்டிருப்பதாக மீனவ மக்களிடம் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பொய் பரப்புரை செய்து வருகிறார். துறைமுகத்தை தேர்தல் பரப்புரையாக்கும் வேலையை மீனவர்கள் நம்ப மாட்டார்கள்” எனப் பேசினார்.
இதையும் படிங்க:’உங்க வீட்டுப் பிள்ளைக்கு ஓட்டு போடுங்க...’ - திமுக வேட்பாளர் உருக்கம்!