ETV Bharat / state

வரும் 26ஆம் தேதி குமரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.. காங்கிரஸ் மீனவர் அணி அறிவிப்பு - காங்கிரஸ் மீனவர் அணி அறிவிப்பு

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து வருவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதைக்கண்டித்து, மீனவர்கள் வரும் இருபத்து ஆறாம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 17, 2022, 10:11 PM IST

கன்னியாகுமரி: தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் கட்டமைப்பு சரியில்லாததால் இதுவரை 26 மீனவர்கள் உயிர் இழந்துள்ளனர். இந்த துறைமுகத்தைச்சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் இன்று (ஆக.17) நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி மாநிலத் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேந்திரகுமார், பிரின்ஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதுகுறித்து ஜார்ஜ் ராபின்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை விபத்து இல்லாத துறைமுகமாக மாற்ற கட்டமைப்புகளை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடத்திய போதிலும் தமிழ்நாடு அரசும் மீன்வளத்துறையும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. எனவே, இதனைக் கண்டித்து வரும் 26ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரளான மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ’துறைமுக கட்டுமானப் பணிகள் நடக்கும்போது, கட்டுமானப் பணிகள் தவறாக உள்ளதாக இங்குள்ள மீனவர்கள் கூறியும் கூட அரசு தரப்பில் முறைகேடுகள் செய்யத்திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறியதைக் கண்டு பொருட்படுத்தாமல் கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டன’ எனக் குற்றம் சாட்டினார்.

வரும் 26ஆம் தேதி குமரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.. காங்கிரஸ் மீனவர் அணி அறிவிப்பு

மேலும் அவர், ‘உயிர்ப்பலி ஏற்பட்டதும் அலுவலர்கள் மீனவர்களை சமாதானப்படுத்தும் பணிகளை மட்டுமே செய்ய வருகின்றனர்; மாறாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை; கண் துடைப்பு நாடகங்களை விட்டுவிட்டு அரசு தரப்பு, முறையாக நடவடிக்கை எடுக்க முன் வாருங்கள்’ எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் தொடர் போராட்டம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.