ETV Bharat / state

வருமானவரித் துறையை தேடி செல்லும் பொன்.ராதாகிருஷ்ணன் - காங்கிரஸ் குற்றச்சாட்டு - bjp

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வி பயத்திலேயே வாக்காளர்களை சந்திக்காமல், வருமானவரித் துறையை தேடிப்போகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன்
author img

By

Published : Apr 14, 2019, 8:55 AM IST

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை எதிர்த்து, பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரை தொடங்கியது முதல் இரு வேட்பாளர்களும், நேருக்கு நேர் தனிப்பட்ட வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரை நிறைவடைய இன்னும் ஓரிரு நாட்கள் உள்ள நிலையில், வசந்தகுமாரின் மைத்துனர் காமராஜ், நாகர்கோவிலில் தங்கியிருந்த தனியார் ஓட்டலுக்கு (சஹானா காஸ்டில்) வருமானவரித் துறையினர் திடீரென சென்றனர். அங்கு காமராஜ் தங்கியிருந்த அறையினுள் சென்ற வருமானவரித் துறையினர் நான்கு பேர் சுமார் அரை மணி நேரம் வரை சோதனையில் ஈடுபட்டனர். இதில் பணம் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், நாகர்கோவிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன், வசந்தகுமார் மைத்துனர் காமராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆனந்த் சீனிவாசன், "கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் உறவினர்களை வருமானவரித் துறை மிரட்டுகிறது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடக்கிறது. பொன். ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் வருமானவரித் துறை, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார். பொன்.ராதாகிருஷ்ணன், மோடியின் ஒரு கைப்பாவை. பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, உள்பட எந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள், அமைச்சர்கள் வீட்டிலும் ரெய்டு நடத்தப்படுவதில்லை ஏன்?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன்

தமிழ்நாட்டில் காங்கிரஸ்-திமுக, கூட்டணி ஜெயிக்கப்போவது உறுதி. தோல்வி பயத்தில் பாஜக மிரட்டுகிறது. தேர்தல் ஆணையம், பாஜக மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

வருமானவரித் துறை சோதனையில் எதுவும் கிடைக்காத நிலையில், எங்களிடம் எதுவும் இல்லை என்று கூறி சென்றனர். சோதனையில் பணம் எதுவும் கிடைக்காத நிலையில், சோதனை நடந்ததாக எந்தவித தகவலும் வருமானவரித் துறை எங்களுக்கு தரவில்லை. சோதனை பற்றிய பொய்யான தகவலை எதிர்க்கட்சியினர் தெரிவிக்கக் கூடாது என்பதற்காகவே, தற்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளோம். தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் எங்களை தடுக்கும் நோக்கில் சோதனைகள் நடக்கின்றன" என தெரிவித்தார்.

TN_KNK_03_13_GANGIRAS_BYTE_SCRIPT_TN10005 பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வி பயத்திலேயே வாக்காளர்களை சந்திக்காமல், வருமான வரி துறையை தேடி போகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன், வசந்தகுமார் மைத்துனர் காமராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் உறவினர்களை வருமான வரித்துறை மிரட்டுகிறது. தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடக்கிறது. பொன். ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் வருமான வரித்துறை, தேர்தல் கமிஷனை பயன்படுத்துகிறார். பொன்.ராதாகிருஷ்ணன், மோடியின் ஒரு கைப்பாவை. பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க., உள்பட எந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள், அமைச்சர்கள் வீட்டிலும் ரெய்டு நடத்தப்படுவதில்லை ஏன். நாடு முழுவதும் வேறு யாரும் தப்பு பண்ணவில்லையா. தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணி ஜெயிக்க போவது உறுதி. தோல்வி பயத்தில் பா.ஜ.கமிரட்டுகிறது. தேர்தல் கமிஷன், பா.ஜ.க மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்பட வேண்டும். வருமான வரித்துறை சோதனையில் எதுவும் கிடைக்காத நிலையில், எங்களிடம் எதுவும் இல்லை என்று கூறி சென்றனர். சோதனையில் பணம் எதுவும் கிடைக்காத நிலையில், சோதனை நடந்ததாக எந்த வித தகவலும் வருமான வரித்துறை எங்களுக்கு தரவில்லை. சோதனை பற்றிய பொய்யான தகவலை எதிர்கட்சியினர் தெரிவிக்கக்கூடாது என்பதற்காகவே, தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளோம். தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் எங்களை தடுக்கும் நோக்கில் சோதனைகள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார். பாக்ஸ் வசந்தகுமார் மைத்துனர் தங்கியிருந்த தனியார் விடுதியில் ஐ.டி., ரெய்டு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் துவங்கியது முதல் இரு வேட்பாளர்களும், நேருக்கு நேர் தனிப்பட்ட வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரம் நிறைவடைய இன்னும் ஓரிரு நாள்கள் உள்ள நிலையில், குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் மைத்துனர் காமராஜ், நாகர்கோவிலில் தங்கியிருந்த தனியார் ஓட்டலில்(சஹானா காஸ்டில்) நேற்று சுமார் பகல் 12 மணியளிவில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு காமராஜ் தங்கியிருந்த அறையினுள் சென்ற அதிகாரிகள் நான்கு பேர் சுமார் அரை மணி நேரம் வரை சோதனையில் ஈடுபட்டனர். இதில் பணம் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடைக்காததால் திரும்பி சென்றனர். ஐ.டி., ரெய்டால், குமரி தோ்தல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.