ETV Bharat / state

தகவல் தொழில்நுட்பத்திற்கான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு தொடக்கம்! - ரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு

கன்னியாகுமரி: டிஜிட்டல் விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது.

Conference
author img

By

Published : Aug 3, 2019, 9:54 AM IST

சர்வதேச அமைப்பு சார்பில் டிஜிட்டல் விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கு மாநாடு கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த மாநாடு இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகநாதன் வரவேற்புரையும், தலைவர் ரஞ்சித் சின்கா மாநாடு பற்றிய உரையையும் ஆற்றினர். இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பேசியதாவது, தொழில்துறை புரட்சியின் நான்காவது சகாப்தத்தில் நாம் உள்ளதால் டிஜிட்டல் தொழில்நுட்பமானது விளையாட்டுத் துறையில் ஒரு வீரரின் செயல்திறன் சார்ந்த காரணிகளை தொழில்நுட்ப உதவியுடன் அளவிட்டு அந்த வீரரின் திறனை மேம்படுத்த முடியும் என்று கூறினார்.

கன்னியாகுமரியில் தொடங்கிய தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு

அவரைத் தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினரான நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, தொழில்நுட்ப சாதனங்கள், தகவல் தொகுப்புகள் மூலம் விளையாட்டு உட்பட எல்லா துறையிலும் எதிர் நபரின் பிழைகள், வலிமை, பலவீனம் ஆகியவற்றை அடையாளம் காண முடிகிறது.

தொலைதூரக் கல்வி முறையில், விளையாட்டுத் துறையில் உள்ள வாய்ப்புகள் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து படிப்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கல்வியியல் விளையாட்டு துறை நிபுணர்களின் ஆலோசனைகள் காணொளி கருத்தரங்குகள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

இம்முறையில் விளையாட்டு கல்வியை கொண்டுவரும் பட்சத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனை கிடைக்கும் வாய்ப்புகள் அமையும் என்றார்.

Intro:டிஜிட்டல் விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு கன்னியாகுமரியில் இன்று துவங்கியது.

Body:டிஜிட்டல் விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு கன்னியாகுமரியில் இன்று துவங்கியது.

சர்வதேச அமைப்பு சார்பில் டிஜிட்டல் விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச கருத்தரங்கு மாநாடு கன்னியாகுமரியில் துவங்கியது. இந்த மாநாடு கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பேசியதாவது :-தொழில்துறை புரட்சியின் நான்காவது சகாப்தத்தில் நாம் உள்ளோம். இந்த காலத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பமானது விளையாட்டு ,சுகாதாரம் மற்றும் பிற துறைகளிலும் நுழைந்துள்ளது. குறிப்பாக விளையாட்டு துறையில் ஒரு வீரரின் செயல்திறன் மற்றும் அது சார்ந்த காரணிகளை தொழில்நுட்ப உதவியுடன் அளவிட முடியும் .அவற்றைக் கொண்டு ஒரு வீரரின் திறனையும் மேம்படுத்த முடியும் உள்ள ஒரு நல்ல பயிற்சியாளரும் ஐசிடி நிபுணரும் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
இதற்கு "விர்சுவல் ரியாலிட்டி "ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்த விர்சுவல் ரியாலிட்டி மூலம் விளையாட்டில் காயம் இல்லாமல் விளையாடும் திறனை அதிகரிப்பது பல காரணிகளை எளிதில் கண்டறிய முடியும். தொழில்நுட்பத்தில் பல்வேறு சவால்களும் வருவாயும் இருப்பதால் பல்வேறு தனியார் நிறுவனம் கல்வி நிறுவனங்களும் இதில் அதிக அளவில் முதலீடு செய்ய முன் வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு விஷயங்களை விளையாட்டுத் துறை தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள் விவாதிக்க உள்ளனர் இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு பேசியதாவது:-
விளையாட்டுத்துறை மட்டுமின்றி மனித சமுதாயம் கலாச்சாரத்தையும் தொழில்நுட்பம் மாற்றியுள்ளது .தொழில்நுட்பம் மெதுவாகவே வளர்ச்சி பெற்றதாகும். இந்த மாற்றமானது வாய்ப்புகளையும் சவால்களையும் உருவாக்கியுள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இன்று நாம் நினைத்த இலக்கை எளிதில் அடைவதற்காக தொழில்நுட்பம் பேருதவியாக உள்ளது.

தொழில்நுட்ப சாதனங்கள் தகவல் தொகுப்புகள் மூலம் விளையாட்டு உட்பட எல்லா துறையிலும் எதிர் நபரின் பிழைகள் வலிமை மற்றும் பலவீனத்தை அடையாளம் காண உதவுகின்றன .நேரத்தையும் வளங்களையும் மேம்படுத்தவும் தொழில்நுட்பம் உறுதுணையாக இருக்கும் விளையாட்டுத் துறையில் ஒரு நபர் எதிர்நோக்கும் சாதனையை முழுமையாக அடைய தொழில்நுட்பம் வழிவகுக்கும். விளையாட்டு மிக உயர்ந்த போட்டியை வெளிப்படுத்துகிறது. போட்டியில் தனிநபர்கள் அல்லது அணியாக ஒருவர் துறையில் சிறந்தவராக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் தரவு பகுப்பாய்வு களை துறையில் ஒரு தலைவராக இருக்க பயன்படுத்தவேண்டும். கிராமப்புறம் நகர்ப்புறங்களுக்கு இடையே நிறைய இடைவெளிகள் உள்ளன. திறன் அதிக ஆற்றல் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் இருப்பதை காண முடிகிறது. இது போன்ற இளைஞர்களுக்கு வாழ்வில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களின் திறமையை வெளிக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது தொலைதூரக் கல்வி முறையில் விளையாட்டு துறையில் உள்ள வாய்ப்புகள் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து படிப்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கல்வியியல் விளையாட்டு துறை நிபுணர்களின் ஆலோசனைகள் காணொளி கருத்தரங்குகள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். உலகில் யாரும் வாய்ப்புகளை இழக்க கூடாது. ஏனெனில் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் நகரங்களுக்கு சென்று தங்கவோ கல்லூரிக்கு செல்லவோ முடியாது. இம்முறையில் விளையாட்டு கல்வியை கொண்டு வரும் பட்சத்தில் இந்த இடைவெளியை குறைக்க முடியும். எனவே கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் நுட்பம் நிபுணர்களின் ஆலோசனை கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் .
முன்னதாக இதன் பொதுச் செயலாளர் சண்முகநாதன் வரவேற்புரையாற்றினார் தலைவர் ரஞ்சித் சின்கா மாநாடு பற்றிய உரையாற்றினார் நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.