தமிழ்நாடு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்டத் தலைமை பிஎஸ்என்எல் அலுவலம் முன்பு கண்களில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஆள் குறைப்பு, சம்பள குறைப்பைக் கண்டித்தும், ஊழலுக்கு வழிவகுக்கும் அவுட்சோர்சிங் முறை போன்றவற்றை அமல்படுத்துவதை ரத்துசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், நிலுவையில் உள்ள எட்டு மாத சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டம் நாகர்கோவில் மட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மற்ற பிஎஸ்என்எல் அலுவலகங்களிலும் நடைபெற்றது.
இதையும் படிங்க: பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!