கன்னியாகுமரி: மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் மேற்கு கடல் பகுதிகளான அரபிக்கடல் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலம் இன்று ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவில் முடிவடைந்து ஆக.1ஆம் தேதி அதிகாலை முதல் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கத் தயாராகி வருகின்றன.
அந்த வகையில், குளச்சல் முதல் கேரளா உட்பட குஜராத் மாநிலம் வரை உள்ள அரபிக்கடல் பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளில் வெள்ளோட்ட பணிகளை செய்யத்தொடங்கியுள்ளன. குளச்சலில் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணிகள், மீன்வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைப்படகுகளில் ஏற்றும் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக மீன்பிடித்தடைக்காலத்தை முன்னிட்டு வெறிச்சோடி காணப்பட்ட குளச்சல் மீன்பிடித்துறைமுகம் விசைப்படகுகளில் ஐஸ் கட்டிகள், மீன்வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை ஏற்றும் போன்ற பணிகளால் மீண்டும் களைகட்டத்தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: நொச்சிக்குப்பத்தில் அதிநவீன மீன் விற்பனையகம் - மாதிரி படம் வெளியீடு!