கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள தெற்காசிய மீனவர் தோழமை என்ற மீனவர் அமைப்பு சார்பில் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அதன்படி இந்த அமைப்பின் பொதுச் செயலாளர், பாதிரியார் சர்ச்சில் தலைமையில் மீனவர்கள் குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு, விசைப் படகுகளில் சென்று சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.
வாய்ப்பு கொடுங்கள், மாற்றத்தை தருகிறோம்! பார்வையற்ற பெண் பரப்புரை
இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டு படகில் வைத்து இனிப்புகளை வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். இச்சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.