உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறப்பை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் நாளை தொடங்கவுள்ள நிலையில், அப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட கிறிஸ்தவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பேக்கரிகளில் கேக் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன.
கிறிஸ்துமஸில் முக்கியமாக இடம்பெறுவது பிளம் கேக். இந்த பிளம் கேக் தயாரிக்கும் பணியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரிகளும் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக பிளம் கேக், பட்டர்கேக், சாக்லெட் புட்டிங்கேக், புரூட்கேக், நட்ஸ் கேக்குகள் தற்போது மும்பரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
பிளம் கேக் கிலோ ரூ. 700 முதல் ரூ. 770 வரை உள்ளது. பட்டர்கேக் கிலோ ரூ. 440க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் தற்போது வாங்கி செல்கின்றனர்.
இதுபோல் சாக்லெட் புட்டிங் கேக், புரூட் கேக், நட்ஸ் கேக் ஆகியவை தயாரிக்கப்படவுள்ளது. இந்த கேக்குகள் கிலோ ரூ.450 முதல் கிடைக்கும். பேக்கரிகளில் பலர் தங்கள் தேவைக்கு ஏற்ப ஆர்டர் கொடுத்தும் செல்கின்றனர்.
இதையும் படியுங்க:
பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்த கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய யானைகள்!