கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் உள்ள புனித தோமையார் தேவாலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த அக்டோபர் 1ஆம் அன்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருக்கொடியானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட பேராயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சின்னமுட்டம் மட்டுமின்றி குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்கள் ஏராளமோனர் கலந்து கொண்டனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலி சிறப்பு பிரார்த்தனைகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முன்னதாக கி.பி.52இல் கேரளாவிலும் அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வருகை தந்த தோமையார், திருச்சிலுவைகளை நேரடியாக நிறுவினார்.
அவர் மறைவுக்குப் பின்னர் இயேசு கிறிஸ்துவின் இந்திய திருத்தூதர் என்ற பெருமைக்குரியவருக்கு, கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கிய கிறிஸ்தவ அனுமானியர்களால் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் அமைக்கப்பட்ட புனித தோமையார் சிற்றாலயம் இதுவாகும். மேலும் போர்ச்சுக்கீசியர்கள் கடல் மார்க்கமாக வந்து திருப்பலிகளை செய்த வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிலம்மாள்புரத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அனுமதி கோரிய மனு தள்ளுபடி