கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை எஸ்டேட்டைச் சேர்ந்தவர் ரவி (21). இவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்துவருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்குறும்பொத்தையைச் சேர்ந்த பெண் ஒருவரை ரவி திருமணம் செய்துகொண்டார். பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்துவருகிறார்.
இந்நிலையில், சுசீந்திரம் அருகே உள்ள பதினெட்டாம்படி என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ரவிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தச் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கர்ப்பமாக்கி உள்ளார்.
சிறுமி கர்ப்பமானது தெரிந்தவுடன் அவருடனான சந்திப்பை ரவி நிறுத்திவிட்டார். இதன் பிறகு தொலைபேசி மூலம் ரவியை தொடர்புகொண்டு, தன்னை திருமணம் செய்து கொள்ளக்கூறி பலமுறை சிறுமி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரவி எந்தப் பதிலும் கூறாமல் சிறுமியை சந்திப்பதையும் பேசுவதையும் முற்றிலுமாக தவிர்த்துள்ளார்.
இதனால் அந்தச் சிறுமியின் தாயார் இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் நிலைய உதவி ஆய்வாளர் மீனாகுமாரி விசாரணை நடத்தினார். அதில், திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ரவி ஏமாற்றி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து ரவி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மகளுக்கு பாலியல் தொல்லை - வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது