பெருந்தலைவர் காமராஜரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் நாடார் சங்கங்களும் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பலர் நல திட்ட உதவிகள், உணவுகள் வழங்கி காமராஜரின் 118வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.
அந்த வகையில் குமரிமாவட்டம் நாகர்கோவில் பிச்ரோடு நாடார் வாலிபர் சங்க இளைஞர்கள் இணைந்து பீச்ரோடு பகுதி 1118 மக்களுக்கு முட்டையுடன் இன்று(ஜூலை 20) சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கினர்.
இது குமரி மாவட்டத்தில். மிகவும் பரபரப்பாகவும், இதுவரை எந்த தலைவர்கள் பிறந்த நாளுக்கு செய்யாத அளவுக்கு நாடார் வாலிபர்கள் சங்கத்தினர் செய்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள், நாடார் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய நிகழ்ச்சி மாவட்டத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.