தமிழ்நாட்டில் உள்ள பிரசித்து பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருகோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை பெருந் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சித்திரை பெருந்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாவது நாள் விழாவான இன்று தேரோட்டத் திருவிழா நடைபெற்றது.
தேரோட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி மற்றும் கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வடம் பிடித்துத் தொடக்கி வைத்தனர். இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.