ETV Bharat / state

வில்சன் கொலை வழக்கு: விசாரணைக்கு மத்திய உளவு பிரிவு நாளை வருகை

கன்னியாகுமரி: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த மத்திய, மாநில உளவு பிரிவு, மற்றும் கியூ பிரிவு அலுவலர்கள் நாளை நாகர்கோவில் வரவுள்ளனர்.

வில்சன் கொலை வழக்கு
வில்சன் கொவில்சன் கொலை வழக்குலை வழக்கு
author img

By

Published : Jan 22, 2020, 7:20 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையைச் சேர்ந்த அப்துல் சமீம்(25), நாகர்கோவில் கோட்டார் இளங்கடையைச் சேர்ந்த தவ்பீக்(27) ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இருவரும் குமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது உபா சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், வருகிற 31ம் தேதி மாலை 4 மணிக்கு இருவரையும் மீண்டும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அருள் முருகன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று 2வது நாளாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி ஆகியவை எங்கு உள்ளது என்றும் அவற்றை வேறு யாரிடமாவது கொடுத்து வைத்துள்ளனரா என்றும் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல் கொலை நடந்த நாளில் எங்கு தங்கியிருந்தனர்? அவர்களுடன் வந்த பிற நபர்கள் யார்? கொலைக்கு பின்பு தப்பி செல்ல அவர்களுக்கு உதவியவர்கள் யார்? போன்ற கேள்விகளுடன் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்றது எனத் தெரிகிறது. இதற்கு இருவரும் முறையாக பதில்கள் எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்ததாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த கட்டமாக சம்பவம் நடைபெற்ற களியக்காவிளை சோதனை சாவடிக்கு இருவரையும் நேரில் அழைத்து சென்று கொலை நடந்த விதம் குறித்து விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரிடமும் மேல் விசாரணை நடத்துவதற்காக மத்திய, மாநில உளவு பிரிவு, மற்றும் கியூ பிரிவு அலுவலர்கள் நாளை நாகர்கோவில் வரவுள்ளனர். அவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருவருக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், குடியரசு தினத்தை சீர்குலைக்க திட்டமிட்டனரா? என பல்வேறு கேள்விகளை எழுப்பவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வப்போது விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து என்.ஐ.ஏ. அலுவலர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:

நிழலுலக தாதா சோட்டா ராஜன் மீதான வழக்குகள்: சிபிஐ விசாரணை தொடக்கம்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டு கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி ஆகியவை எங்கே? அதை எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என தவுபீக், அப்துல் சமீமிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலை நடந்த களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு இருவரையும் அழைத்து சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர் .Body:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியல் சுட்டும், கத்தியால் குத்தியம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், கோட்டாறு இளங்கடையை சேர்ந்த தவுபீக் ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலைய பகுதியில் கடந்த 14ம் தேதி கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், வருகிற 31ம் தேதி மாலை 4 மணிக்கு இருவரையும் மீண்டும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அருள் முருகன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று 2வது நாளாக போலீஸார், மற்றும் கியூ பிரிவு போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். எஸ்.ஐ. வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி ஆகியவை எங்கு உள்ளது. அதை வழியில் வீசி சென்றார்களா? அல்லது யாரிடமாவது கொடுத்து வைத்துள்ளனரா? என தவுபீக், அப்துல் சமீம் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதைப்போல் கொலை நடந்த நாளில் பகலில் தங்கியிருந்த இடம் எது? அன்று அவர்களுடன் வந்த பிற நபர்கள் யார்? கொலைக்கு பின்பு தப்பி செல்ல உதவியவர்கள் யார்? போன்ற கேள்விகளுடன் விசாரணை தொடர்ச்சியாக நடந்தது. இதற்கு தவுபீக்கும், அப்துல் சமீமும் முறையாக பதில்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் மவுனம் காத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக எஸ்.ஐ. வில்சனை சுட்டுகொன்ற களியக்காவிளை சோதனை சாவடிக்க இருவரையும் நேரில் அழைத்து சென்று கொலை நடந்த விதம் குறித்து விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
Conclusion:இவர்கள் இருவரிடமும் மேல் விசாரணை நடத்துவதற்காக மத்திய, மாநில உளவு பிரிவு, மற்றும் கியூ பிரிவு அதிகாரிகள் நாளை நாகர்கோவில் வரவுள்ளனர். அவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்தும், குடியரசு தினத்தை சீர்குலைக்க திட்டமிட்டனரா? எனவும் விசாரணை நடத்தவுள்ளனர். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிளுக்கும் தகவல்களை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.