கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வள்ளவிளை, மிடாலம், மார்த்தாண்டம்துறை ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சுமார் 100 மீனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மீனவர்களின் உயிர்களுக்கு மத்திய அரசு தான் காரணம்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. சிவசேனாவை ஆதரிக்க மாட்டோம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். அகில இந்திய காங்கிரஸ் என்ன முடிவெடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம்.
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கையில் இருந்து போய்விட்டது என்று சொல்வதைவிட அதிகாரத்திற்கும், பணத்திற்கும் சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நாங்குநேரி தொகுதிக்கு 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 3 ஆண்டுகளில் செய்து விட்டேன். அங்கு தேர்தல் நடக்கவில்லை, ஜனநாயக படுகொலை தான் நடந்தது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க: மீனவர்களை மீட்டு தாருங்கள்: வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை