கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை என்ற பகுதியில் செல்போன் டவர் உள்ளது. இப்பகுதியில் சந்தேகத்திற்குறிய வகையில் இளைஞர் ஒருவர் சுற்றி திரிந்தார். இந்த செல்போன் டவருக்கு வந்து செல்லும் ஊழியர்கள் பற்றி அப்பகுதி மக்களுக்கு பரீட்சியம் உள்ளதால், புதிதாக வந்த இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரை ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் அந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அவர் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த சிவன்பிள்ளை என்பது தெரியவந்தது. மேலும், செல்போன் டவரில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகளையும் அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.