ETV Bharat / state

தடையை மீறி பொதுக்கூட்டம்; 2 காங்கிரஸ் எம்எம்ஏக்ள் மீது வழக்கு! - gutka seize

கன்னியாகுமரி: காவல்துறையின் அனுமதியை மீறி பொதுக் கூட்டம் நடத்தி, காவலர்களை தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

CONGRESS MLAS
author img

By

Published : Jun 6, 2019, 10:30 PM IST

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, குடோன் உரிமையாளர் செல்வராஜ் உள்பட நான்கு பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் செல்வராஜ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில், குட்கா பறிமுதல் விவகாரத்தில் செல்வராஜ் கைதை கண்டித்து, கடந்த 4ஆம் தேதி மாலையில் காங்கிரஸ் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இந்தப் பொதுக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. தடை உத்தரவை மீறி, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், திமுக, மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுப் பேசினர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் காவல்துறையையும், அங்கு பணியிலிருந்த டி.எஸ்.பி.,யையும், அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அனுமதியின்றி கூடுதல், அரசு அலுவலர் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், அரசு அலுவலர்களைத் தரக்குறைவாகப் பேசியது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்ளிட்ட 12 பேர் மீது மார்த்தாண்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்கா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அனுமதியின்றி பொது கூட்டம் நடத்தியதாக, 2 காங்கிரஸ் எம்.எல்..க்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே ரூ.1கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, குடோன்உரிமையாளர் செல்வராஜ் உள்பட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் செல்வராஜ், குமரி மேற்குமாவட்ட காங்கிரஸ் துணை தலைவராகஉள்ளார்இந்நிலையில், குட்கா பறிமுதல் விவகாரத்தில் செல்வராஜ் கைதை கண்டித்து, கடந்த 4ம் தேதி மாலையில்காங்கிரஸ் சார்பில் கண்டன பொது கூட்டம்மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் அருகே நடந்தது.

இந்த பொது கூட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், தடை உத்தரவை மீறி, காங்கிரஸ் எம்.எல்..க்கள் ராஜேஷ்குமார்பிரின்ஸ்தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., உள்ளிட்டகூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் காவல்துறையை மற்றும் பணியில் இருந்த டி.எஸ்.பி.,யையும், அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியை கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அதிகாரிகளை தரக்குறைவாக பேசியது உள்பட பல்வேறு பிரிவுகளில் கீழ்,காங்கிரஸ் எம்.எல்..க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்ளிட்ட 12 பேர் மீது மார்த்தாண்டம்போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காங்கிரஸ் எம்.எல்..க்கள் மீது போலீசார்வழக்கு பதிவு செய்த சம்பவம் குமரியில்பரபரப்பை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.