ETV Bharat / state

நடைபயிற்சி சென்றவர் மீது கார் மோதல் - சிசிடிவி காட்சிகள்

author img

By

Published : Jun 20, 2022, 1:01 PM IST

கன்னியாகுமரி அருகே சாலையோரம் நடைபயிற்சியில் இருந்தவரை, டாடா சுமோ கார் ஒன்று மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிசிடிவி
சிசிடிவி

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டை சேர்ந்தவர் சையது அலி. அப்பகுதியில் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வரும் இவர் இன்று (ஜூன்20) காலை திருவிதாங்கோடு அழகியமண்டபம் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் செஞ்டை மேள இசை குழுவினரை ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக வந்த டாடா சுமோ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதிவேகமாக வந்த வாகனம் நடந்து சென்றவரை தூக்கி வீசிய சிசிடிவி காட்சி

விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிவேகமாக சென்ற டாடா சுமோ கார் சையது அலி மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதை பதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Watch: யாசகரிடம் தங்கமோதிரம், ரொக்கப்பணத்தை திருடிச்சென்ற 'மகா திருடன்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.