ETV Bharat / state

குமரியில் சிஏஏ எதிர்ப்பு தர்ணா போராட்டம்! - சிஏஏ எதிர்ப்பு தர்ணா போராட்டம்

கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த இளங்கடை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரண்டு நாள்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றுவருகிறது.

குமரியில் சிஏஏ எதிர்ப்பு தர்ணா போராட்டம்!

author img

By

Published : Mar 12, 2020, 12:02 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இளங்காடு பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரண்டு நாள்கள் தர்ணா போராட்டம் இன்று தொடங்கியது. இந்தப் போராட்டம் இளங்கடை பகுதியில் உள்ள பாபா காசிம் அப்பா சமூக நலக்கூடம் எதிர்புறத்தில் உள்ள திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

குமரியில் சிஏஏ எதிர்ப்பு தர்ணா போராட்டம்!

இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் நாகர்கோவில் தலைவர் ஷேக் பாபு தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.