கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தன் துறை கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாகர்கோவிலில் இருந்து புத்தன் துறை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அவர் ஏறுவதற்கு காலதாமதமானதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அப்பெண்ணை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் ஊர் மக்களிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்தப் பேருந்து புத்தன்துறை கிராமத்திற்கு சென்றபோது ஊர்மக்கள் திரண்டு பேருந்தை சிறைபிடித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பெண்ணை தரக்குறைவாக பேசிய ஓட்டுநர் மாணிக்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து மாணிக்கம் அப்பெண்ணிடமும், பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அங்கிருந்து பேருந்தை எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஈத்தாமொழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் காயம்