ETV Bharat / state

புரெவி புயல்: பயிர்களைக் காப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி! - விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கன்னியாகுமரி: புயல் மற்றும் கனமழையிலிருந்து மரங்களை காக்க விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பயிர்களுக்கும் மரங்களுக்கும் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புரெவி புயல்: பயிர்களை காக்க நடத்தப்பட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

author img

By

Published : Dec 1, 2020, 9:39 PM IST

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், தோவாளை வட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்கள் பயிர்களையும், மரங்களையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும். கனமழை மற்றும் புயலிலிருந்து பயிர், மரங்களை காக்க விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பயிர்களுக்கும் மரங்களுக்கும் காப்பீடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும், எவ்வாறு காப்பீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெருக்களில் கலாச்சார கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

புரெவி புயல்: பயிர்களை காக்க நடத்தப்பட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

இதற்கான தொடக்க் நிகழ்ச்சி சுசீந்திரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேளாண் துறை மாவட்ட இயக்குனர் அவ்வை மீனாட்சி தலைமை வகித்து கலாச்சார கலை நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, கன மழையிலிருந்து பயிர்களை காக்க விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டம்: பாஜக தலைவர் வீட்டில் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.