கன்னியகுமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம் முறையாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'மாவட்ட தலைமையில் நடைபெறும் கண்காணிப்பு குழுவை மாதமொருமுறை நடத்தி குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்திடவேண்டும்.
கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கல் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி நியாய விலையில் பொருள்களை வழங்க வேண்டும்.
அரசு வழங்கும் அம்மா சிமென்ட் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3,000 உயர்த்தி வழங்க வேண்டும்” எனக் கூறினார்கள்.