ETV Bharat / state

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.49,600 லஞ்சப் பணம் பறிமுதல்! - rto office

கன்னியாகுமரி: நாகர்கோவில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.49,600 பறிமுதல் செய்யப்பட்டது.

rto office
author img

By

Published : Jul 27, 2019, 11:28 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பண்டாரபுரத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் விடுமுறை தினமான இன்று பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., மதியழகன் தலைமையிலான காவல்துறையினர், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு சென்றபோது போக்குவரத்து காவலர் செந்தில்குமார் தனது காரில் புறப்பட்டு சென்றதாக தகவல் கிடைத்தது.

ஆர்.டி.ஓ அலுவலகம்

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் செந்தில்குமாரின் காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.49 ஆயிரத்து 600 இருந்தது தெரியவந்தது. அதன்பின், அந்த பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விடுமுறை தினத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச பணப்பரிமாற்றம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Intro:நாகர்கோவில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்
போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.49,600
பறிமுதல் செய்யப்பட்டது.Body:tn_knk_03_rto office_vijilens_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

நாகர்கோவில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்
போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.49,600
பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பண்டாரபுரத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்பட்டு
வருகிறது.
இந்த அலுவலகத்தில் விடுமுறை தினமான இன்று பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., மதியழகன் தலைமையிலான போலீசார் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு
சென்ற போது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தனது காரில் புறப்பட்டு வெளியே சென்று
கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் தங்களது வாகனத்தில்
தொடர்ந்து சென்று செந்தில்குமாரின் காரை வழிமறித்து சோதனை செய்தனர், அப்போது அவரிடம் இருந்து
ரூ.49 ஆயிரத்து 600 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவரை ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு அழைத்து வந்து அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் அலுவலக கம்ப்யூட்டரை ஆய்வு செய்யப்பட்டதோடு, அலுவலக அறைகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், போலீசார்
ரூ.49 ஆயிரத்து 600 ஐ பறிமுதல் செய்தனர். விடுமுறை தினத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச
பணப்பரிமாற்றம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.