ETV Bharat / state

ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்தது ஏன்? - விளக்கமளிக்கிறார் சிவதாணுப்பிள்ளை

author img

By

Published : Nov 11, 2019, 3:24 PM IST

கன்னியாகுமரி: அமெரிக்க தயாரிப்பு ஏவுகணைகளை விட அதிசக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்கவே ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து பிரமோஸ் ஏவுகணை உருவாக்கினோம் என சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

Sivathanupillai

பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாகர்கோவில் வந்தார். பின்னர் செய்தியாளரைச் சந்தித்து அவர், "இந்தியாவை உலக அரங்கில் முதன்மை நாடாக முன்னிறுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டதுதான் பிரமோஸ் ஏவுகணை. அமெரிக்க தயாரிப்பு ஏவுகணைகளை விட அதிசக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்கவே ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து பிரமோஸ் ஏவுகணை உருவாக்கினோம்.

சந்திரயான், மங்கள்யான் ஆகிய செயற்கைக்கோள்கள் சிறப்பாக செயல்பட்டு அங்குள்ள தகவல்களை அனுப்பிவருகின்றன. இதற்கு முன்னால் அனுப்பப்பட்ட செயற்கைக்கோளானது நிலவில் உள்ள கற்களை படம்பிடித்து அனுப்பியது.

இதுவரை நிலவில் ஆய்வு செய்வதற்காக 48 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு தோல்வியடைந்துள்ளன. எந்த நாடாக இருந்தாலும் முதல் முயற்சியில் வெற்றியடைய வேண்டுமென்று இல்லை. நிலவில் ஆய்வு செய்வதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவிடம் உள்ளது. 2020ஆம் ஆண்டு நிலவில் ஹீலியம் எடுப்பதற்கான தொழிற்சாலையைத் அமெரிக்கா தொடங்க திட்டமிட்டுள்ளது.

கன்னியாகுமரி

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான இடைவெளி உள்ளது. இந்தியா வளர்ந்துவரும் நாடாக இருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சி செய்வதில் நான்காவது இடத்தில் உள்ளது. எந்த நாடு விண்வெளி ஆராய்ச்சியில் முன் நிலையில் இருக்கிறதோ அந்த நாட்டுடன் கூட்டு சேர்ந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய அறுவடை முடிந்ததும் நிலங்களில் உள்ள கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு எரித்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் புகைமூட்டம் காரணமாகவே டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான ஏ.பி. சாஹி யார்?

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை கலந்து கொண்டார். அமெரிக்க தயாரிப்பு ஏவுகணைகளை விட அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்கவே ரஷ்யாவுடன்கூட்டு சேர்ந்து உருவாக்கப்பட்டது பிரம்மோஸ் ஏவுகணை என்று தெரிவித்தார்.Body:பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் வந்தார். இதன் பின்னர் செய்தியாளரை சந்தித்து அவர் கூறியதாவது:
இந்தியாவை உலக அரங்கில் முதன்மை நாடாக முன்னிறுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவே தயாரிக்கப்பட்டது தான் பிரம்மோஸ் ஏவுகணை. அமெரிக்காவை கண்டுபிடித்த ஏவுகணைகளை விட அதிக சக்தி உடையதாக இருக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது.
சந்திராயன் மங்கள்யான் ஆகிய செயற்கைக்கோள்கள் சிறப்பாக செயல்பட்டு அங்குள்ள தகவல்களை அனுப்பி வருகிறது. இதற்கு முன்னால் அனுப்பப்பட்ட அப்பல்லோ செயற்கை கோளானது நிலவில் உள்ள கற்களை படம்பிடித்து வந்துள்ளது. இதுவரை நிலவில் ஆய்வு செய்வதற்காக 48 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு தோல்வியடைந்துள்ளது.
எந்த நாடாக இருந்தாலும் முதல் முயற்சியில் வெற்றி அடைய வேண்டுமென்று இல்லை. நிலவில் ஆய்வு செய்வதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவிடம் உள்ளது. 2020ஆம் ஆண்டு அமெரிக்கா நிலவில் ஹீலியம் எடுப்பதற்கான தொழிற்சாலையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான இடைவெளி உள்ளது. இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சி செய்வதில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. எந்த நாடு விண்வெளி ஆராய்ச்சியில் முன் நிலையில் இருக்கிறதோ அந்த நாட்டுடன் கூட்டு சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய அறுவடை முடிந்ததும் நிலங்களில் உள்ள கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு எரித்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் புகைமூட்டம் காரணமாகவே டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.