ETV Bharat / state

'இந்தியாவின் ஒரு துளி நிலத்தைக் கூட இஸ்லாமியர்களால் அசைக்க முடியாது' - பொன்.ராதாகிருஷ்ணன் - Public Meeting on behalf of BJP to explain Citizenship Amendment Act

குமரி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைகீழாக நின்று போராடினாலும் இஸ்லாமியர்களால் இந்தியாவின் ஒரு துளி நிலத்தைக் கூட அசைக்க முடியாது என பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகர்கோவிலில் பொன்.இராதாகிருஷ்ணன் பேச்சு

author img

By

Published : Feb 21, 2020, 7:43 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை விளக்க பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் பேசுகையில், "1955ஆம் ஆண்டில் நாடாளுமன்ற விவாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கேட்டு பேசியவர்கள் காங்கிரஸ்காரர்கள்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைகீழாக நின்று போராடினாலும் இந்தியாவின் ஒரு துளி நிலத்தைக் கூட, அசைக்க முடியாது எனவும்; அப்படியொரு நிலை ஏற்பட்டால் 1947ஆம் ஆண்டை விட மிக மோசமான சூழல் உருவாகும் எனவும் ஆவேசமாகப் பேசினார்.

நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு

மேலும், பாகிஸ்தான் பிரிந்தபோது மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும் எனக் கூறிய அவர், அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இந்தியாவில் வாழ குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார். 1967ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக பிணந்தின்னி அரசியல் நடத்திய திமுகவை நம்பி யாரும் போராட்டத்தில் களத்தில் இறங்க வேண்டாம் எனவும் கூறினார்.

இதையும் படிங்க:

‘எரிமலை ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்’ - வைகோ காட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.