விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்து பெண்களை இழிவாக பேசியதாகக் கூறி, அவரை உடனடியாக தமிழ்நாடு அரசு கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கன்னியாகுமரி மாவட்ட பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை தமிழ்நாடு அரசு உடனே கைது செய்ய வேண்டும் எனவும் இந்து பெண்களை இழிவாக பேசுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்திற்கு மாநில பாஜக மகளிரணிச் செயலர் உமாரதிராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சித் தலைவர் மீனாதேவ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அணியைச் சேர்ந்த 200 பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.