இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர் தன்னலமின்றி செயல்பட்டுவருகின்றனர். அதேசமயம் நாட்டில் அதிகரித்துவரும் இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் விளிம்புநிலை மக்கள் வருமானமின்றி தவித்துவருகின்றனர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சிவிளையில் உள்ள தூய்மை பணியாளர்கள், அக்கிராக ஏழை எளிய மக்கள் 300 பேருக்கு குமரி மாவட்ட பாஜக பொருளாளர் முத்துராமன் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து!