ETV Bharat / state

பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் பாஜகவினர் வேல் பூஜை! - கன்னியாகுமரி பாஜக உறுப்பினர்

கன்னியாகுமரி: பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் பாஜகவினர் வேல் பூஜை நடத்தினார்கள்.

பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் பாஜக-வினர் வேல் பூஜை!
Vel pooja in bagavathiyamman temple
author img

By

Published : Aug 11, 2020, 6:39 AM IST

கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோக்கள் வெளியிட்டிருந்தனர்.

இதனால் உலகமெங்கும் வாழும் தமிழர்கள், கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள் இச்செயலை கண்டித்து பல ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு பாஜக தலைமை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் வீடு தோறும் வேல் பூஜையும் , கந்த சஷ்டி கவசமும் ஒலிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதியம்மன் கோயில் தெப்பக்குள வளாகத்தில் பாஜக பிரமுகர்கள் சிலர் விளக்கு ஏற்றி வேல் பூஜை செய்தனர். மேலும், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்னும் கோஷத்தையும் எழுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.