ETV Bharat / state

கீழமை நீதிமன்றங்களை செயல்பட அனுமதிக்க வேண்டும் - பாஜக வழக்கறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம் - வாழ்வாதாரம்

கன்னியாகுமரி: வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்திற்காக கீழமை நீதிமன்றங்களை உடனடியாக செயல்பட வைக்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

lawyers-wing
lawyers-wing
author img

By

Published : Sep 21, 2020, 12:35 AM IST

குமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள் கூட்டம், நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (செப்.,20) நடந்தது. கூட்டத்திற்கு மாநில மகளிரணி தலைவி உமாரதி ராஜன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், கன்னியாகுமரிக்கு வருகை தரும் பாஜக மாநிலத் தலைவர், எல்,முருகனுக்கு மாவட்ட எல்லையில் வழங்கப்படும் வரவேற்பில், வழக்கறிஞர்கள் அதிகப்படியான வாகனங்களில் சென்று வரவேற்க வேண்டும், படந்தாலுமூட்டில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு மாநில அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க போலி மருத்துவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மத்திய மாநில அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் உருவப்படம் வைக்க வேண்டும், வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்திற்காக கீழமை நீதிமன்றங்களை உடனடியாக செயல்பட வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க : டெல்லி விரைந்த டிடிவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.