நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஆர். காந்தி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். அவருடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எம்.ஆர். காந்தி கூறுகையில், “நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சட்டக் கல்லூரி ஒன்றையும், நர்சிங் கல்லூரி ஒன்றையும் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்” என்று வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சிகள் அள்ளிவிடும் வாக்குறுதிகள் : சீமானின் கவுன்ட்டர்