தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் எம்.ஆர். காந்தி நேற்று (ஏப்ரல் 3) நாகர்கோவிலின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் சென்ற இடமெல்லாம் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மாலை மரியாதையுடன் சிறப்பாக வரவேற்றும் அவரை உற்சாகப்படுத்தினர்.
தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ’குமரியில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும். நாகர்கோவில் மக்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும்’ என்று வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிங்க: 'கருத்துக்கணிப்பை நம்பவில்லை' - நடிகை நமீதா