கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டோடு இணைக்க போராடியவர்களில் முன்நின்றவர் மார்ஷல் நேசமணி. இதனால் இவர் குமரியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
மார்ஷல் நேசமணியின் 126ஆவது பிறந்தநாளான இன்று (ஜூன் 12) நாகர்கோவிலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக மணிமண்டபத்தில் வேறு யாரையும் அனுமதிக்காத நிலையில், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஜயதரணி, பிரின்ஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் அதிமுகவினரும் பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் பிறந்தநாள்: அரசியல் கட்சியினர் மரியாதை - குமரியின் தந்தை மார்ஷல் நேசமணி
கன்னியாகுமரி: மார்ஷல் நேசமணியின் 126ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.