கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று (ஜனவரி 29) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுசீந்திரம், புத்தளம், ராஜக்கமங்கலம் உள்ளிட்ட 20 குளங்களில் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியன.
இந்த பணியில் மாவட்ட வனத்துறை, சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோக் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுக்கும் பணி குறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா கூறுகையில், "இந்த முறை பிலிப்பைன்ஸ், சைபீரியா, ரஷ்யா, சீனா மற்றும் மங்கோலியாவில் இருந்து 16,000 கிலோ மீட்டர் தூரம் பறந்து வந்த கொசு உள்ளான், பிளம்பிங்கோ போன்ற வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வந்துள்ளது.
இது மட்டும் இல்லாமல், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பறவைகள் அதிகமாக வருகை தந்து உள்ளதால் கணக்கெடுக்கும் பணி சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் குளிர் சீசன் தீரும் வரை, இந்த பறவைகள் இங்கு தங்கி இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!