ETV Bharat / state

அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு: குமரி தமாகா தலைவர் விலகல்

கன்னியாகுமரி: அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மேற்கு மாவட்ட த.மா.கா தலைவர் பினுலால் சிங் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

பினுலால்சிங்
author img

By

Published : Mar 26, 2019, 4:53 PM IST

ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்நிலையில் குமரி மாவட்ட த.மா.கா., தலைவர் பினுலால்சிங் அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார். இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தியபோது, குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளாகிய நாங்கள் மத சார்பற்ற கூட்டணியில் இணைய வேண்டும் என்று தெரிவித்தோம்.

ஆனால் ஜி.கே.வாசன், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக கூறி, அதில் இணைந்துள்ளார். இதனை குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் யாரும் ஏற்கவில்லை.

மேலும் இந்தக் கூட்டணியில் இணைய வேண்டுமானால், குமரி மாவட்டத்தில் உள்ள துறைமுக பிரச்சனை, தனியார் காடுகள் சட்டம் உள்ளிட்ட 3 பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதுவும் ஏற்கப்படவில்லை.

எனவே த.மா.காவில் நீடிக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஆகவே நாங்கள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரை விரைவில் சந்தித்து, அவர் முன்னிலையில் நிர்வாகிகள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி: குமரி மேற்கு மாவட்ட த.மா.கா., தலைவர் பினுலால்சிங் அந்த கட்சியில் இருந்து விலகினார். மேலும் அவர்  தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.

குமரி மேற்கு மாவட்ட த.மா.கா., தலைவர் பினுலால்சிங் அந்த கட்சியில் இருந்து விலகினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் த.மா.கா., அ.தி.மு.க-பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியபோது, குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த த.மா.கா நிர்வாகிகளாகிய நாங்கள் மத சார்பற்ற கூட்டணியில் இணைய வேண்டும் என்று தெரிவித்தோம்.  
ஆனால் ஜி.கே.வாசன், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக கூறி,  அதில் இணைந்துள்ளார். இதனை குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் யாரும் ஏற்கவில்லை. 
 மேலும் இந்தக் கூட்டணியில் இணைய வேண்டுமானால், குமரி மாவட்டத்தில் உள்ள துறைமுக பிரச்னை, தனியார் காடுகள் சட்டம் உள்ளிட்ட 3 பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதுவும் ஏற்கப்படவில்லை.  
எனவே த.மா.கா.,வில் நீடிக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஆகவே நாங்கள் மாநில காங்கிரஸ் தலைவரை விரைவில் சந்தித்து, அவர் முன்னிலையில் நிர்வாகிகள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.