கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ்கான். இவரது மகன் செய்யது ஹுசேன் (16). செய்யது ஹுசேன் உறவினர் மகனான ஷேக் முகமது என்பவருடன் மார்த்தாண்டம் பகுதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது காப்புக்காடு பகுதியில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிரில் வந்த லாரி மோதியில் தலை நசுங்கி செய்யது ஹுசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் படுகாயம் அடைந்த ஷேக் முகமது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் செய்யது ஹுசேனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து புதுக்கடை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.