கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ராணி (26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்தும் இதுவரை குழந்தை இல்லை.
இந்நிலையில், இந்தத் தம்பதி இன்று காலை இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் வந்த இவர்கள் பிற்பகல் வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சென்றுகொண்டிருந்தபோது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை தினகரன் முந்த முயன்றுள்ளார்.
இதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் எஸ்தர் ராணியின் தலை சிக்கியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தினகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், எஸ்தர் ராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சிலிண்டர் வெடித்த தீ விபத்தில் - பல லட்ச மதிப்பிலானசொத்துகள் சேதம்!